ஏப்ரல் 12, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் பெரியசாமி நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்பவர், சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர், தனது உறவினரான மணி என்பவரது மகளை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு மணி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். Husband Hanging Suicide: மனைவி இறந்த துக்கத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட கணவர்..!

இந்நிலையில், நேற்றைய தினம் மணி மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் கார்த்திக்கை அவர்கள் வைத்திருந்த கத்தியால் (Stabbed To Death By The Girl's Father) சரமாரியாக குத்தி, அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். கத்தியால் குத்துப்பட்ட கார்த்திக் படுகாயமடைந்து, நிகழ்விடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த அவனியாபுரம் காவல்துறையினர், கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த கார்த்திக்கின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர், கொலை செய்த தந்தை, மகன் இருவரையும் கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.