டிசம்பர் 21, சென்னை (Chennai): கடந்த 2006 முதல் 2011 வரை, திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில், தமிழ்நாடு அரசின் கீழ் உள்ள விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்: இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு, பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்ய தீர்ப்பளித்தது. இருப்பினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேல் முறையீடு செய்தனர். மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அதில் பொன்முடி மற்றும் விசாலாட்சி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து, அவர்கள் குற்றவாளிகள் என உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பளித்தார். Layoff at ShareChat: ஷேர் சாட்டின் ஆட்குறைப்பு நடவடிக்கை... 200 ஊழியர்கள் பணிநீக்கம்..!
அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை: இதனைத் தொடர்ந்து, இன்று நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி. அதுமட்டுமின்றி அபராதம் கட்ட தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். தற்போது உயர்கல்வி அமைச்சராக இருப்பதால் 30 நாட்களுக்கு தண்டனையை நீதிபதி நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தீர்ப்பில் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறி உள்ளார்.