பிப்ரவரி 29, மதுரை (Madurai): சிவகங்கை மாவட்டம் கீழடியில் (Keeladi) கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வு பணியை மேற்கொண்டார். இதில் 5000-க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கிடைத்தன. அத்துடன் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, ஸ்ரீராமன் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடந்த 3-ம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான பொருட்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி, அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொள்ளவும், கீழடி அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை மத்திய அரசு தமிழக அரசிடம் திருப்பி ஒப்படைக்கவும் மனு தாக்கல் செய்திருந்தார். Quick And Easy Donut Recipe: குழந்தைகளுக்கு பிடித்தமான டோனட்.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!
இந்த மனுவானது தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி தனபால் தலைமையில் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் (Madurai High Court) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமையில் ஆஜரான வழக்கறிஞர் கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்கள் அனைத்தும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன்படி நீதிபதிகள், “அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட பின் மத்திய தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கிடைத்த 5765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் பொது வெளியில் வெளியிட வேண்டும்.” எனத் தெரிவித்தனர்.