பிப்ரவரி 29, சென்னை (Chennai): குழந்தைகள் மிகவும் பிடித்து விரும்பி சாப்பிடக்கூடிய ரெசிபிகளில் ஒன்று டோனட். டோனட்டில் சாக்லேட் டோனட் , கோகனட் டோனட் , ஸ்ட்ராபெர்ரி டோனட்,ஜெல்லி டோனட் , ப்ளூ பெர்ரி டோனட், சுகர் டோனட் என்று இன்னும் அதன் விதங்கள் நீண்டு கொண்டே செல்லும். அந்த வகையில் இன்று நாம் சூப்பரான கோதுமை டோனட் (Donut ) வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -இரண்டு கப்
ஈஸ்ட் - ஒன்றரை டீஸ்பூன்
சீனி - ஒன்றரை ஸ்பூன்
பால் - ஒரு கப்
ரீபைண்டு ஆயில் - இரண்டு கப்
ஸ்பிரிங்கிள்ஸ் - சிறிதளவு
சாக்லேட் உருக்கியது - அரை கப்
உப்பு - அரை ஸ்பூன் Matrimony Scam: மேட்ரிமோனி மூலம் 259 பெண்களிடம் மோசடி... காவல்துறையினரிடம் சிக்கிய பலே ஆசாமி..!
செய்முறை: வெது வெதுப்பான சூடுள்ள பாலில் ஒன்றரை ஸ்பூன் ஈஸ்ட். ஒன்றரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து தனியே வைக்கவும். மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு அரைஸ்பூன் உப்பு. இரண்டு ஸ்பூன் ஆயில் சேர்ந்து கலந்து பிசிறி வைக்கவும். அந்த மாவில் ஆக்டிவேட் ஆன ஈஸ்ட் கலந்த பால் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் புளிக்க விடவும்.
ஒரு மணி நேரம் கழித்து மாவு புளித்து இரண்டு மடங்காக இருக்கும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமாக சூடானதும் மாவை திரட்டி அதில் டோனட் கட்டரால் ரவுண்டாக வெட்டி அதை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பொரித்த டோனட்களை சாக்லெட உருக்கிய கலவையில் தோய்த்து அதன் மேல் ஸ்பிரிங்கிள்ஸ் தூவி அலங்கரிக்கவும். அவ்வளவு தான் ருசியான கோதுமை டோனட் ரெடி.