![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1720600454Tomorrow%20weather%205.jpg?width=380&height=214)
பிப்ரவரி 10, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை. அதிகபட்சமாக ஈரோடு மாறும் கரூர் பரமத்தி பகுதியில் 35.0 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில்,
இன்றைய வானிலை (Today Weather):
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 10-02-2025 இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். Paramakudi Accident: குறுக்கே புகுந்த டூவீலர்.. சடன் பிரேக் அடித்த ஓட்டுநர்.. தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து; 12 குழந்தைகள் காயம்.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
11-02-2025 நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 12-02-2025 முதல் 16-02-2025 வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை (Chennai Weather Today) மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast Today):
இன்று (10-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பறிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (11-02-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.