Fisherman (Photo Credit: Pixabay)

மே 27, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று (26.05.2024) வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த 'ரீமல்' புயலானது, வடக்கு திசையில் நகர்ந்து, நள்ளிரவு (26.05.2024) 2230 மணி -(27.05.2024) 0030 மணி அளவில் வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்காள கடற்கரை அருகில் சாகர்தீவிற்கும் (மேற்கு வங்காளம்), கேப்புப்பாராவிற்கும் (வங்கதேசம்) இடையே கரையை கடந்தது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுகளில் வடமேற்கு / மேற்கு திசை காற்று நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (The Chennai Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Face Tissues: அழகுசாதன லிஸ்டில் டிஸூ.. கட்டாயம் சேர்த்துக்கொள்ளுங்கள்..!

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் அதனால் இன்று மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.