Tissues (Photo Credit: Pixabay)

மே 27, சென்னை (Chennai): பெண்கள் எப்போதும் பயன்படுத்தும் அழகு சார்ந்தப் பொருட்களின் லிஸ்டில் டிஸூவையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். மேலை நாடுகளில் அனைத்து தேவைக்கும் பயன்படுத்தும் டிஸூ இந்தியாவிலும் அலுவலகங்கள், நட்சத்திர உணவகங்கள் என ஆங்காங்கே மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிஸூக்கள் பெண்களுக்கு அதிகம் பயனுள்ளாதாக இருக்கிறது. டிஸூக்கள் (Tissues) 10 ரூபாயிலிருந்து கடைகளில் கிடைக்கிறது.

வெட் (ஈரப்பதமான) டிஸூ: வெளியில் செல்லும் போது தூசி, மற்றும் மாசு துகள்கள் முகத்தில் படுவதால் சருமம் பாதிப்படையும். இதற்கு வெட் டிஸூ (Wet Wipe) பயன்படுத்தலாம். அதன் பிறகு லைட் டச்சப் செய்யலாம். எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு கற்றாளை, வெள்ளரி, அல்லது கிரின் டீ வகையான வெட் டிஸூ ஏற்றதாகும். உலர் சருமம் உடையவர்கள் ஆல்கஹால் இல்லாத டிஸூவை பயன்படுத்தலாம். Ulefone Armor 25T Pro: யூலிஃபோனின் ரக்டு ஸ்மார்ட்போன்.. யூலிஃபோன் ஆர்மர் 25T ப்ரோ அறிமுகம்..!

டிரை (உலர்) டிஸூ: டிரை டிஸூ (Dry Wipe) மென்மையான உலர் டிஸூவாகும். எப்போதும் கைகுட்டையைப் பயன்படுத்துவதால் அதிலேயே தேங்கி இருக்கும் வியர்வை, அழுக்கு, முகத்தில் ரேஸஷ் மற்றும் தோல் நோய்களை உண்டாக்கும். அதனால் கைகுட்டையைவிட டிஸூ உபயோகிப்பது சால சிறந்தது. இந்த டிஸூவை எல்லா வகையான சருமத்திற்கும் பயன்படுத்தலாம். குறிப்பாக இது வேகமாக நீரை உறிஞ்சுவதால் எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.