ஏப்ரல் 09, நெல்லை (Tirunelveli News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 43) என்பவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவந்திப்பட்டி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். Thalapathy Vijay Spiritual Temple Visit: அப்பாவைப் பார்க்க போன அண்ணா.. தலைவர் விஜய் சாய்பாபா கோவிலில் தரிசனம்..!

இவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், திருநெல்வேலி புறநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், மாவட்ட காவல்துறை அதிகாரி சிலம்பரசன், கடந்த 5-ஆம் தேதி தலைமை காவலர் ராஜகோபாலை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ராஜகோபால் அவர்கள், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, ராஜகோபால் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் அதிகாரி சிலம்பரசன் அவர்கள், தலைமை காவலர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.