ஏப்ரல் 09, சென்னை (Cinema News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்து வருகிறார். Pear Lassi Recipe: லஸ்ஸி பிரியர்களுக்காக.. பேரிக்காய் லஸ்ஸி செய்வது எப்படி?.!

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்றது. மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பானது துபாயில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது துபாய் சாய்பாபா கோவிலில் (Sai Baba temple) நடிகர் விஜய் தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.