Megamalai (Photo Credit: theni.nic.in)

மார்ச் 27, மேகமலை (Theni News): கடந்த 2021-ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் தமிழகத்தின் 5-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம், தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வனச்சரகம் இந்தியாவின் 21-வது புலிகள் காப்பகமாக உருவாக்கப்பட்டது. இவற்றுள், மேகமலையில் இருக்கும் கண்டமனூர், சாப்டூர், ஏரசக்கநாயக்கனூர் ஜமீனுக்கு சொந்தமான பட்டா நிலக்காடுகளில் தனியார் சார்பில் காபி, ஏலக்காய் சாகுபடி செய்துவருகின்றனர். இங்கு செல்வதற்கு பாதை வசதி இல்லாதது, வன உயிரினங்களின் நடமாட்டம் மற்றும் தொழிலாளர் பிரச்சனைகள் என பல காரணங்களால் பெரும்பாலும் காடுகளுக்குள் செல்ல இயலாத சூழ்நிலை இருக்கிறது. World Theatre Day 2024: கடவுள் யாருன்னு யார் பார்த்த.. அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்.. உலக நாடக அரங்க தினம்..!

வனத்துறை அதிகாரிகள் நில உரிமையாளர்களிடம், ஹைவேவிஸ் வனப்பகுதியில் ஏகன் ஜகா பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்த 30.41 ஏக்கர் தனியார் பட்டா காடுகளை விலை பேசி வாங்கியுள்ளனர். சுமார் 2.31 ரூபாய் கோடிக்கு, ஏழு பேரிடம் இருந்து இந்த பட்டா காடுகளை வனத்துறையினர் வாங்கி வனப்பகுதியுடன் இணைத்துக்கொண்டனர்.

முதல்முறையாக இந்தியாவில் தனியார் நிலங்களை வர்த்தக பயன்பாட்டுக்காக இல்லாமல் வனப்பகுதிகள் புலிகள் காப்பகத்திற்காக மாநில அரசு விலைக்கு வாங்கியது. மேலும், தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா மற்றும் புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் முன்னிலையில் பத்திரப்பதிவு செய்யப்பட்டு, நல்ல முயற்சிகளை முன்னெடுத்து தேனி மாவட்டத்தின் வனப்பகுதிகளை விரிவுப்படுத்தியுள்ளனர்.