மார்ச் 27, சென்னை (Chennai): உலக நாடக அரங்க தினம் (World Theatre Day) என்பது மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும். இது முதன்முதலில் 1961 ஆம் ஆண்டில் சர்வதேச நாடக நிறுவனத்தால் குறிக்கப்பட்டது. இந்த நாள் கலை வடிவத்தை மேம்படுத்துவதையும், கலை வடிவத்தின் மதிப்பை பரந்த அளவில் மக்களுக்கு உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விழா கொண்டாடபட முதல் நோக்கமாக பார்க்கப்படுவது சினிமாக்களின் அசுர வளர்ச்சிக்கு பின்னர் மேடை நாடகங்கள் உலகம் முழுவதுமே பெரிய அளவில் சரிவை சந்தித்து. மேடை நாடகங்கள் அழிந்து விட கூடாது அதை நினைவுகூற வேண்டும் அந்த கலைஞர்களை வருடத்திற்கு ஒரு முறையாவது கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த நாடக அரங்க தினம் கொண்டாடபடுகிறது. இன்று நாம் திரையில் ரசித்துக்கொண்டிருக்கும் பெரும்பாலான பிரபலங்களும், அவர்களின் தடங்களை மேடை நாடகங்களில் பதித்தவர்கள்தான். மேடைகளில் சாதித்த பின்னர்தான் அவர்கள் சினிமாவுக்கே வந்தவர்கள். Head Master Arrest on Pocso Act: "தேர்வில் பெயிலாக்கிடுவேன்" - 5ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச படம்காட்டி பாலியல் தொல்லை; தலைமை ஆசிரியர் அதிர்ச்சி செயல்.!
மேடை நாடகங்கள் இன்று உலகம் முழுவதும் குறைந்திருந்தாலும் கிரீஸ், பிரான்ஸ் போன்ற நாடகங்களின் பிறப்பிடம் என்று சொல்லபடும் ஊர்களில் இந்த கலையை மறக்காமல் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர். இது நம் ஊரிலும் பெரிய முக்கிய நகரங்களில் நல்ல கலைஞர்களின் திறனால் நடைபெற்று வருகிறது.