South TN Rains (Photo Credit: @_Imsarath2000 X)

டிசம்பர் 18, மதுரை (Madurai): குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தற்போது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்த நிலையில், நேற்று பெய்த கனமழையால் இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் (Red Alert) அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விருதுநகர், மதுரை, தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் தற்போது விடுத்துள்ளது. South TN Rains: தொடர் வெள்ளப்பெருக்கு: சாத்தூர் அருகே கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை!

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "இன்று மதியம் 1 மணிக்குள் விருதுநகர் மற்றும் மதுரையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, தேனி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகையிலும் மிதமான மழை பெய்யலாம். மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம். சாலைகள் வழுக்கும் தன்மையும் இருக்கும். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். பழுதான கட்டிடங்கள் சேதம் அடைவதற்கான வாய்ப்பு உள்ளது." என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.