ஏப்ரல் 05, கலிபோர்னியா (Cinema News): பேட்மேன் படத்தில் வில்லனாக வந்தாலும் அனைவரின் மனதையும் கவர்ந்த கதாப்பாத்திரம் தான் ஜோக்கர். இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜோக்கர்'. அப்படத்தில் ஹாக்கின் ஃபீனிக்ஸ் (Joaquin Phoenix) இப்படத்தில் ஜோக்கராக நடித்திருந்தார். சமூகத்தால் ஒதுக்கப்படும் ஒருவர் அதற்குப் பதிலாக வன்முறையைக் கையில் எடுக்கும் விதமாக இந்த படம் வந்ததாலேயே, அனைவரும் இப்படத்தினைக் கொண்டாடினர். Apple Home Robotics: "பூம் பூம் ரோபா டா ரோபா டா.." புதிய மனிதனை வீடு வேலைக்காக உருவாக்கும் ஆப்பிள்..!

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இதை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் டிசி காமிக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இபடத்திற்கு ' ஜோக்கர்: ஃபாலி அ டியூக்ஸ்' (Joker: Folie à Deux) என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரைலர் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் (Warner Bros) தனது சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.