Summer Weather Report (Photo Credit: Team LatestLY)

மார்ச் 17, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில்‌ நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதியில் அதிகபட்சமாக 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக வேலூரில் 37.0 டிகிரி செல்சியஸ்‌ பதிவாகியுள்ளது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியல் குறைவாக பதிவாகியுள்ளது. வட தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ சமவெளி பகுதிகளில்‌ 34-37 டிகிரி செல்சியஸ், தென் தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ சமவெளி பகுதிகளில்‌ 31-37 டிகிரி செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31-35 டிகிரி செல்சியஸ்‌ பதிவாகியுள்ளது. Gold Silver Price: வாரத்தின் முதல் நாள் தங்கம் விலை சரிவு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று (17-03-2025) முதல் 23-03-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:

17-03-2025 முதல் 21-03-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (17 -03-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (18-03-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌.