Sexual Harassment (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 02, வால்பாறை (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே மாணவிகளுக்கு கல்லூரிக்குள் சிலர் பாலியல் தொந்தரவு (Sexual Harassment) அளிப்பதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் இருந்து வந்த சமூக நலத்துறை அதிகாரிகள் (Social Welfare Officer) மற்றும் காவல்துறையினர் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவிகளை மட்டும் தனியாக அழைத்து சென்று விசாரித்தனர். அதில், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறிய 6 மாணவிகளிடம் பதிவு செய்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் கிருஷ்ணவேணி, பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து, தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர். Trichy Shocker: நூடுல்ஸ் சாப்பிட்ட 16 வயது சிறுமி மரணம்; திருச்சியில் அதிர்ச்சி.. பெற்றோர்கள் கண்ணீர் குமுறல்.!

அதில், வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த பேராசிரியர் சதீஷ்குமார் (வயது 39), வால்பாறை காமராஜ்நகர் பகுதியை சேர்ந்த லேப் அசிஸ்டெண்ட் அன்பரசு (வயது 30), வால்பாறை தாய்முடி எஸ்டேட் பகுதியை சேர்ந்த என்சிசி அலுவலர் முரளிராஜ் (வயது 33), ஊட்டி பகுதியை சேர்ந்த நான் முதல்வன் திட்ட அலுவலர் ராஜபாண்டி ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதன்பின்னர், பாலியல் சீண்டல் மற்றும் பெண் வன்கொடுமை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் நேற்று (செப்டம்பர் 01) கைது செய்தனர். பின்னர் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தற்போது, 6 மாணவிகள் மட்டுமே புகார் அளித்துள்ள நிலையில், மேலும் சில மாணவிகள் புகார் அளிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.