மார்ச் 11, நெல்லை (Tirunelveli News): நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வெள்ளான்குளியில் சாலை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7-ஆம் தேதி அன்று, அந்த வழியாக மோட்டார் வாகனத்தில் வந்த குடிபோதையில் இருந்த 2 மர்ம நபர்கள் சாலையில் மோட்டார் வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்த வழியாக வந்த அனைவரையும் வாகனத்தை வழிமறித்து தகராறு செய்தனர். மேலும், அரசு பேருந்துகளையும் வழிமறித்தனர். A Teenager Was Stabbed To Death: பிழைக்கச்சென்ற இடத்தில் கள்ளக்காதல்.. 35 வயது இளைஞரை போட்டுத்தள்ளிய லாரி ஓட்டுநர்.. கண்டித்தும் கேட்காததால் இரத்தம் தெறிக்க சம்பவம்.!
மர்ம நபர்கள்: இதனையடுத்து, அங்கு சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த தொழிலாளியான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள உடையநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 42) குடிபோதையில் இருந்த மர்ம நபர்களை கண்டித்து, பேருந்துகளுக்கு வழிவிடுமாறு கூறினார். இதனால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த மர்ம நபர்கள் கருப்பசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற மூலச்சியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரையும் வெட்டினர். இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். சம்பவத்தை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து வீரவநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்கள்.
துப்பாக்கி சூடு: உடனடியாக வந்த காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். சிறிது நேரத்தில் முக்கூடல் அருகே திருப்புடைமருதூரில் சென்ற அரசு பேருந்துகளையும் மறித்து, பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தனர். அந்த வழியாக வந்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற போது, ஏட்டு செந்தில்குமார் அவர்களை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி, அருகில் இருந்த வாழைத்தோட்டத்திற்குள் தப்பி ஓடினர். உடனே, காவல்துறையினர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மர்ம நபர்களின் ஒருவரின் காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். மேலும், மற்றொருவரையும் மடக்கி பிடித்து மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் முக்கூடல் அருகே தென்திருப்புவனத்தைச் சேர்ந்த காளி மகன் பேச்சிதுரை (வயது 23) மற்றும் கள்ளிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சந்துரு (வயது 23) என்பது தெரியவந்ததுள்ளது. அரிவாள் வெட்டில் காயமடைந்த காவல்துறை ஏட்டு செந்தில்குமார் பாளையங்கோட்டை ஜகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பேச்சிதுரை சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்தார். பேச்சிதுரை உயிரிழப்பை தொடர்ந்து, நெல்லை வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.