TN Police Logo (Photo Credit: Wikipedia)

ஏப்ரல் 04, சென்னை (Chennai News): தமிழக காவல் துறையில் சார் ஆய்வாளர் (Sub Inspector SI Recruitment) பதவிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தாலுகாவில் 933 பணியிடங்கள், ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 1299 பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்த 20-30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். TN Govt Schools: சினிமா பாடலுக்கு நடனமாட தடை.. தமிழக அரசு அதிரடி..!

சம்பள விவரம்:

ரூ.36,900 - ரூ.1,16,600 ஊதியமாக வழங்கப்படும். மேலும், இந்த பணி இடங்களுக்கான தேர்வுக்கு வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம்.

வகுப்புவாரி இடஒதுக்கீடு:

தற்போதுள்ள விதிகளின்படி, வகுப்புவாரி இடஒதுக்கீட்டின் சதவீதம், பற்றாக்குறை காலிபணியிடங்களைத் தவிர அனைத்து பதவிகளுக்கும் பொருந்தும். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான இடஒதுக்கீடு விவரங்கள் அறிவிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

  • பொது விண்ணப்பதார்களுக்கு: தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல் தேர்வு, உடற்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டி, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • துறை சார்ந்த விண்ணப்பதார்களுக்கு: முதல்நிலை எழுத்துத் தேர்வு, முதன்மைத் தேர்வு, சான்றிதழ் சாரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படுவார்கள்.
  • இறுதியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்காலிக பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து, மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

  • தமிழ்நாடு காவல் துறை SI பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrb.tn.gov.in/ க்கு சென்று ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இப்பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறையை அறிய, விவரங்களுக்கு TNUSRB-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.