ஏப்ரல் 03, திருத்தணி (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் ஜெயந்தி மற்றும் இவரது மகள் (வயது 20) வசித்து வருகின்றனர். அதே பகுதியில் மாதவன் என்பவரது மகன் பாலாஜி (வயது 20) ஜெயந்தியின் மகளை காதலிக்க வற்புறுத்தி, கடந்த சில மாதங்களாக தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், தொடர்ந்து இவ்வாறு அவர் பின்னால் சுற்றி தொல்லை கொடுத்துள்ளார். Pumpkin Soup: மருத்துவ குணமிக்க பூசணிக்காய் சூப் செய்வது எப்படி..? – விவரம் உள்ளே..!
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜெயந்தி மற்றும் அவரது மகள் வீட்டில் இருந்தபோது, வீட்டிற்கு சென்ற பாலாஜி அந்த பெண்ணை பார்த்து கேலியாக பேசியுள்ளார். இதனை தட்டி கேட்ட அவரது தாயார் ஜெயந்தியை ஆபாசமாக திட்டியுள்ளார். மேலும், ஜெயந்தியை பார்த்து என் வழியில் தலையிடாதே, மீறி தலையிட்டால் கல்லைக் கொண்டு அடித்து கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் (Youngman Threatened To Kill) விடுத்துள்ளார்.
இதனையடுத்து, ஜெயந்தி திருத்தணி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், கிராமத்திற்கு வந்த காவல்துறையினர் சம்மந்தப்பட்ட பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.