Pumpkin Soup (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 03, சென்னை (Kitchen Tips): உணவு பழக்க வழக்கங்கள் மாறிவருவதால் நம் உடல் நலம் பாதிப்படைந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் அதிக காரமான உணவுகள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் புண் ஏற்பட்டு பெரும் அவதிபட்டு வருகின்றனர். இதனை சரிசெய்ய பூசணிக்காய் சூப் தாயார் செய்து பருகலாம். தொடர்ந்து 15 நாட்கள் பருகி வந்தால் சிறுநீரக பிரச்சனைகள், கல் அடைப்பு, கொலஸ்ட்ரால், உடல் பருமன் ஆகிய பிரச்சனைகள் நீங்கும். பூசணிக்காய் சூப் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். Comet Seen Once Through A Telescope: 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை தென்படும் வால்நட்சத்திரம் – தொலைநோக்கியால் பார்க்கலாம் என விஞ்ஞானிகள் அறிவிப்பு..!

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் துண்டுகள் - 2 கப்

பால் - 2 டம்ளர்

வெண்ணெய் - 2 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

சின்ன வெங்காயம் - 8

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

சீரகத்தூள், மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெங்காயம், பூண்டு, கொத்தமல்லித்தழை ஆகியவற்றை பொடிபொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு, கடாயில் வெண்ணெயை போட்டு சூடேற்றி, அதில் நறுக்கி வைத்த சின்ன வெங்காயம், நசுக்கிய பூண்டு போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும், அதனுள் பூசணிக்காய் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அதில் நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வேகவைக்க வேண்டும். பூசணிக்காய் வெந்த பிறகு, தண்ணீரை வடித்து தனியாக வைத்துவிட்டு, பூசணிக்காயை மட்டும் ஆற வைக்கவும். பின்பு மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். பூசணிக்காய் வேகவைத்த தண்ணீரில் அரைத்த விழுதை சேர்த்து கலக்கவும். இதனுள், பால், மிளகு, சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலக்கி சிறிது நேரம் கொதிக்க வைத்து, அதன் பிறகு அனைவரும் இதனை அருந்தலாம்.