மார்ச் 26, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள தத்தனேரி அசோக் நகரில் வசித்து வரும் பிரகாஷ் (வயது 43)-காவேரி முத்து. இவர்களுடைய மகள் சர்மிதாமணி (வயது 6). இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். வீட்டில் இருக்கும்போது திடீரென சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பெற்றோர் வீட்டில் இருந்த காய்ச்சல் மருந்தை கொடுத்துள்ளனர். மருந்தை குடித்த சிறுமி, சிறிது நேரத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். Husband Murder His Wife: மனைவி அடித்து கொலை – 7 மாதங்களுக்கு பிறகு கணவர் கைது..!

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய தாய் காவேரி முத்து, உடனடியாக சிறுமியை மீட்டு அவசர ஊர்தியின் மூலம் சிகிச்சை அளிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமி குடித்த மருந்து காலாவதியானது என கண்டறியப்பட்டது. இதனால் தான் சிறுமி உயிரிழந்துவிட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காய்ச்சல் மருந்து குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.