மார்ச் 26, கடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில். அவரது கணவரை ஏழு மாதங்களுக்குப் பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Mother And Son Together Wrote SSLC Exam: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த திருமணமான பெண் – தாயும், மகனும் சேர்ந்து எழுதிய சம்பவம்..!

ஆலம்பாடி மாமலைவாசன் என்பவரது மனைவி அபிநயா. கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்த வாந்தி எடுத்து இவர் உயிரிழந்துள்ளார். உடற்கூறாய்வு பரிசோதனையில் இவரை அடித்து கொலை செய்துள்ளது கண்டறியப்பட்டது. இந்நிலையில், காவல்துறையினர் இதனை கொலை வழக்காக பதிவு செய்தனர்.

மேலும், விசாரணை மேற்கொண்டதில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அவரது கணவர் தான் அவரை அடித்து கொலை செய்துவிட்டு 7 மாதங்களாக தலைமறைவாகி இருந்துள்ளார். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மாமலைவாசன் அவரது மனைவி அபிநயாவை அடித்து கொலை செய்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, அபிநயாவின் கணவர் மாமலைவாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.