Palamedu Jallikattu (Photo Credit: @pmoorthy21 X)

ஜனவரி 16, மதுரை (Madurai): தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் போற்றக்கூடிய வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் உலகப் பிரசித்தி பெற்ற அலங்காநல்லுார், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறும். iQOO Neo 9 Pro: இந்தியாவில் வெளியாகும் iQOO Neo 9 Pro... சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

அவனியாபுர ஜல்லிக்கட்டு: அதன்படி நேற்று நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதில் மொத்தமாக 825 காளைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அதிக காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்தி பரிசுக்கோப்பை மற்றும் காரை வென்றார். அதுமட்டுமின்றி ஜீர் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பரிசுக் கோப்பை மற்றும் கார் பரிசாக கொடுக்கப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டு: இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் மொத்தம் 42 பேர் காயமடைந்தனர். அதில் 9 பேர்மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். தொடர்ந்து சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாவது இடமும், கொந்தகை பகுதியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 8 காளைகள் பிடித்து மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். Israel–Hamas war: இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. தொடரும் தாக்குதல்கள்.. 24,000-ஐ கடந்தது பலி எண்ணிக்கை.!

முதலிடம் பிடித்த பிரபாகரனுக்கு தமிழக அரசு சார்பில் காரும், இரண்டாம் இடம் பிடித்த தமிழரசனுக்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த காளையாக புதுக்கோட்டை ராயவயல் சின்னகருப்பு காளை வெற்றி பெற்றுள்ளது.