ஆகஸ்ட் 07, கோவில்பட்டி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி நகராட்சி, வேலாயுதபுரம் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் வாஞ்சிநாதன். இவரது மகன் முனீஸ்வரன் (வயது 21). கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான கடையில் இவர் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே கடந்த ஜூலை 29ஆம் தேதி காலை எழுந்தவர் பல் துலக்கி இருக்கிறார். அப்போது பல்துலக்கும்போது பேஸ்டுக்கு பதிலாக எலிப்பேஸ்டை தவறுதலாக பயன்படுத்தியதாக தெரிய வருகிறது.
எலி பேஸ்ட்டில் பல் துலக்கி சிகிச்சை பெற்ற இளைஞர் மரணம் :
இதனால் வாந்தி எடுத்து அவதிப்பட்டவர் உடனடியாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடார். அங்கு கடந்த ஒரு வார காலமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த முனீஸ்வரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வானிலை: தமிழகத்திற்கு கனமழை அலர்ட்.. 6 மாவட்டங்களுக்கு வார்னிங்.!
போலீசார் விசாரணை :
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளைஞர் உண்மையில் பேஸ்ட் வைத்து பல்துலக்கி தான் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல பல் துலக்கும் பேஸ்ட் வைத்துள்ள இடங்களில் மக்கள் எலிபேஸ்ட் போன்றவற்றை வைத்திருக்கக் கூடாது. அதற்கான தனி இடத்தை ஒதுக்கி இருக்க வேண்டும். உயரமான இடங்களில் சிறார்களின் கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.