![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/03/Arrest-380x214.jpg)
ஏப்ரல் 25, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக காதலர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது, அவர்கள் கோவில் அருகே உள்ள மரத்தடியில் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த 3 பேர், காதலர்களிடம் கத்தியை (Knife) காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த நகை, பணம், செல்போன் போன்றவற்றை பறித்துச் சென்றுள்ளனர். Heatwave Death: சுட்டெரிக்கும் வெயிலால் 6 பேர் உயிரிழப்பு – சுகாதாரத்துறை தகவல்..!
இச்சம்பவம் குறித்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், வள்ளியூரை சேர்ந்த கண்ணன், கலையரசன் மற்றும் குட்டி ஆகிய 3 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதில், கலையரசன் என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.
இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.