Arrest (Photo Credit: Pixabay)

நவம்பர் 15, தாராபுரம் (Tiruppur News): திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (Dharapuram) அடுத்த உப்பாறு அணைக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், அந்த மாணவர் நேற்று முன்தினம் (நவம்பர் 13) இரவு குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தை போனில் தொடர்பு கொண்டு விடுதி துணை வார்டன் சரண் (வயது 25) தனக்கும், பல மாணவர்களுக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை (Sexual Abuse) கொடுத்து வருவதாக கூறியுள்ளார். வானிலை: வெளுக்கப்போகும் கனமழை; நாளைய வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!

இதுகுறித்த தகவலின்பேரில், உடனடியாக கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நேற்று (நவம்பர் 14) காலை விடுதிக்கு சென்று விசாரணை நடத்தி சரணை கைது செய்தனர். மாணவர்கள் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த விடுதி தலைமை காப்பாளர் ராம்பாபு (வயது 34), புகார் செய்த மாணவரை அடித்த பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் (வயது 50) ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.