
பிப்ரவரி 19, திருப்பூர் (Tiruppur News): ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை தேடி வந்துள்ளார். அங்கு, வேலை இல்லாத காரணத்தால், வீட்டிற்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். அதன் அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர். பந்தலுக்கு பணம் கேட்டு உண்டான தகராறில் 19 வயது இளைஞர் கழுத்தை நெரித்துக்கொலை நெஞ்சை நடுக்கவைக்கும் சம்பவம்.!
பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்:
அப்போது, பீகாரை சேர்ந்த நதீம், டானீஸ், முர்தீஷ் ஆகிய மூன்று வாலிபர்கள் அவர்களிடம் பேசியுள்ளனர். மேலும், தாங்கள் பணிபுரியும் இடத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அவர்களது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு, அந்த 3 வாலிபர்களும் கணவனை கட்டிப்போட்டு, மனைவியை கத்தி முனையில் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்துள்ளனர். மேலும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
பீகார் வாலிபர்கள் கைது:
இதனையடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற ஒடிசா தம்பதி, திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், சம்மந்தப்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்களையும், காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3