Kodungaiyur Youth killed Case (Photo Credit: YouTube)

பிப்ரவரி 17, கொடுங்கையூர் (Chennai News): சென்னையில் உள்ள கொடுங்கையூர், எம்.ஜி.ஆர் நகர், 9 வது தெருவில் வசித்து வருபவர் கிரி (வயது 50). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மகன் அஜித் குமார் (வயது 19) என்பவருடன் தனியாக வசித்து வருகிறார். அஜித் குமாரின் பாட்டி, கடந்த ஜனவரி மாதம் 26 அன்று உயிரிழந்தார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜனார்த்தனன் என்பவரின் உதவியுடன், சாமியானா பந்தல் போடப்பட்டது. இந்த பந்தலுக்கு ரூ.8 ஆயிரம் வாடகை என கூறப்படும் நிலையில், அதனை அஜித் குமார் கொடுக்கவில்லை. இந்த பணத்தை கேட்டபோது ஜனார்த்தனன் - அஜித் குமார் இடையே வாக்குவாதம் உண்டாகி தகராறு இருந்து வந்துள்ளது. இந்த தகராறு முன்விரோதமாக மாறி இருக்கிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வெளியே சென்ற கிரி, பின் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அச்சமயம், அஜித் வீட்டுக்குள் ரத்தகாயத்துடன் சடலமாக இருந்தார். Couple Luckily Escapes: சட்டென குறுக்கே ஓடிய நாய்.. நூலிழையில் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய தம்பதி.. பதறவைக்கும் காட்சிகள்.! 

வீடுபுகுந்து தகராறு & அடித்துக்கொலை:

இந்த விஷயம் குறித்து கொடுங்கையூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அஜித் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையின்போது ஜனார்த்தனன் மீது சந்தேகம் எழவே, அவரிடம் விசாரணை நடந்தபோது உண்மை அம்பலமானது. அதாவது, ரூ.8 ஆயிரம் பணம் கேட்டு அஜித் குமாரின் வீட்டிற்கு சென்று ஜனார்த்தனன் மற்றும் அவரின் நண்பர் பார்த்தீபன் தகராறு செய்தபோது, அங்கு எழுந்த வாக்குத்தத்தில் அஜித் குமார் இருவர் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அஜித் குமாரின் கழுத்தை நெரித்து கொலை நடந்துள்ளது. பின் இருவரும் தப்பிச்சென்ற நிலையில், அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.