Visuals form Spot Police Investigation

ஜனவரி 19, களக்காடு: திருநெல்வேலியில் உள்ள களக்காடு (Kalakkad, Tirunelveli), கட்டார்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 30). இவர் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். ரமேஷின் மனைவி இசக்கியம்மாள் (வயது 23). இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். காதலித்து கடந்த 4 (Couple Love Married) ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்நிலையில், கடந்த 7 நாட்களுக்கு முன் இசக்கியம்மாளுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இன்று சவாரிக்காக ரமேஷ் சேரன்மகாதேவி சென்றுள்ளார். இசக்கியம்மாள் குழந்தையை எழுந்து வந்து பார்த்தபோது காணவில்லை. இதுகுறித்து கணவருக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

பதற்றத்தில் ஆட்டோவை இயக்கிய ரமேஷின் வாகனமும் விபத்தில் சிக்கியது. இதனால் அவ்வழியே வந்தவரை இடைநிறுத்தி இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரும் குழந்தையை வந்து தேடி பார்த்துள்ளனர். RJ Balaji Run Baby Run Trailer: நடிகர் RJ பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிய ரன் பேபி ரன் படத்தின் டிரைலர் வெளியானது..! லிங்க் உள்ளே..!

இதற்கிடையில், குழந்தை ஊர் (New Born Baby Body Found Well Death Mystery) கிணற்றில் பிணமாக மிதந்துள்ளது. குழந்தையின் சடலத்தை மீட்ட உறவினர்கள், களக்காடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கடந்த 2021ல் அவருக்கு பிறந்த குழந்தையும் 20 நாட்களில் தொட்டிலில் மர்மமாக இருந்தது. இசக்கியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், அதற்கான சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இதனால் அவர் குழந்தையை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 19, 2023 10:04 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).