ஏப்ரல் 01, சென்னை (Chennai News): டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1 தேர்வை நடத்தி, தமிழ்நாடு அரசின் உயர்நிலைப் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்கிறது. அந்தவகையில், 2025ஆம் ஆண்டிற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று (ஏப்ரல் 01) வெளியிடப்பட்டுள்ளது. Commercial LPG Cylinder Price: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு.. விவரம் இதோ..!
குரூப்-1 தேர்வு:
வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு (TNPSC Group 1) நடத்தப்படுகிறது. அதன்படி, குரூப் 1 தேர்வு மூலம் மொத்தம் 70 பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக துணை ஆட்சியர் பணியிடத்துக்கு 28 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. துணை காவல் கண்காணிப்பாளர் பணிக்கு 7 காலியிடங்கள், வணிக வரி உதவி ஆணையர் பணியிடத்துக்கு 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, குரூப்-1 கேடரில் இதுவரை தனித்தேர்வாக நடத்தப்பட்டு வந்த தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் தேர்வு, குரூப்-1 தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும் என, கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழிலாளர் நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த முறை சேர்த்து நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் தேதி:
குரூப் 1,1A தேர்வுகளுக்கு இன்று (ஏப்ரல் 01) முதல் ஏப்ரல் 30 வரை TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் மே 5ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.