ஏப்ரல் 01, சென்னை (Chennai News): பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயம் செய்கின்றன. Gas Cylinder Blast: திடீரென வெடித்து சிதறிய சமையல் சிலிண்டர்; 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாப பலி..!
வணிக சிலிண்டர் விலை குறைவு:
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 01) கேஸ் சிலிண்டர்களின் விலை, வணிக பயன்பாட்டுக்காக (Commercial LPG Cylinder) சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ரூ.43.50 குறைந்து, ரூ.1921.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வணிக சிலிண்டரின் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது விலை சற்று குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் வணிக சிலிண்டர் ரூ.1,965க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.