ஜூலை 20, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள தாம்பரம் அருகே சேலையூர் ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன் (வயது 42). இவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதனிடையே, நவநீத கிருஷ்ணன் ஆன்லைன் வர்த்தகத்தில் (Online Trading) ஈடுபட்டு வந்துள்ளார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலரிடம் அதிகளவில் கடன் வாங்கியுள்ளார். இதனையும் இழந்து அதிக கடன் தொல்லையால் அவதி அடைந்துள்ளார். Best Smart TV Under 20000: ரூ.20 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட் டிவி மாடல்கள்.. உட்றாதீங்க மக்களே.!
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற சேலையூர் காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரிக்கையில், நவநீத கிருஷ்ணன் எழுதி வைத்த கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
அதில், 'ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ. 30 லட்சம் பணத்தை இழந்து, கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்ள போகிறேன்' என எழுதி வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.