டிசம்பர் 18, தூத்துக்குடி (Thoothukudi): தற்போது தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென்மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. இதனால், தென்மாவட்டங்களில் உள்ள ஏரிகள் தொடங்கி அணைகள் வரை கிடுகிடுவென நிரம்பி வருகின்றன. அதுமட்டுமின்றி பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு 15 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர்வரத்து உள்ளதாலும், உபரிநீர் வெளியேற்றப்படும் சூழல் உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை: இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் செல்கிறது. இது அணைகளின் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் காற்றாற்று வெள்ளப்பெருக்கு, சிறு குளங்கள் உடைப்பு போன்றவற்றின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தாமிரபரணி ஆற்றன் கரை ஓரம் வசிக்கும் கிராம மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Udaan Lay Offs: அதிரடி முடிவெடுத்த உதான்.. 100க்கும் மேற்பட்ட பணி நீக்கம்..!
அவசர கால எண்கள்: அதுமட்டுமின்றி தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் மழைக்கால அவசர உதவிகளுக்கு (Emergency numbers) கீழ் காணும் உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1077, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம்- 1070, மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு- 104, அவசர மருத்துவ உதவிக்கு- 108, மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம்- 94458 54718, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி 101 மற்றும் 112 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.