டிசம்பர் 18, டெல்லி (Delhi): பி2பி காமர்ஸ் நிறுவனமான உதான் காமர்ஸ் நிறுவனம், ஒரு ஆன்லைன் சந்தையாகும். இது உற்பத்தியாளர்களிடமிருந்து பொருட்களை வாங்கவும் விற்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பேஷன் பொருட்கள், மளிகை பொருட்கள், மின்னணுவியல், பொருட்களை வாங்கவும் விற்கவும் உதவுகிறது. இது கடந்த 2016ல் நிறுவப்பட்டது. தற்போது பல நகரங்களில் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது.
ஊழியர்கள் பணி நீக்கம்: இந்நிலையில் உதான் நிறுவனம், நிறுவனத்தின் மறுசீரமைப்புப் பணியின் ஒரு பகுதியாக, அவர்களது நிறுவனத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் (Lay Offs) செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் தான் இந்த நிறுவனம் 340 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியது. அதற்குள் இத்தகைய பணிநீக்கம் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.