Tiruchendur Murugan Temple (Photo Credit: @ChendurMuruga / @TK_TUTICORIN X)

டிசம்பர் 14, திருச்செந்தூர் (Thoothukudi News): வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தின் டெல்டா, தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 2 தசாப்தங்களுக்கு பின்னர் பெருவாரியான ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பி, வீதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குற்றாலம் அருவியில் அபாயகட்ட அளவைத் தாண்டி, பேரச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. Job Alert: மருத்துவர்களுக்கு குட் நியூஸ்! சவுதி அரேபிய அமைச்சகத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு..! 

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்:

இதனால் தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பிரதான நீர் தேக்கங்கள் நிரம்பி இருக்கின்றன. தாமிரபரணி ஆறுகளில் மீண்டும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்த காரணத்தால், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசு முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருச்செந்தூர் வர வேண்டாம்:

இந்நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு (Tiruchendur Murugan Temple) இன்றும், நாளையும் பக்தர்கள் வர வேண்டாம். கனமழை தொடரும் என அறிவிப்பு வெளியிடப்படுள்ள காரணத்தாலும், தாமிரபரணி (Thamirabarani River) ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும், பக்தர்களின் நலன் கருதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.