ஏப்ரல் 26, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கருங்காலி வலசு கிராமத்தை சேர்ந்த இரண்டு மாணவிகள் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். Realme Narzo 70 Series Launch: சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி நார்சோ 70 சீரிஸ் வெளியீடு..! விவரம் உள்ளே..!
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இவ்விரண்டு மாணவிகளையும் பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக, பள்ளியின் தலைமை ஆசிரியை (School Headmaster) இளமதி ஈஸ்வரி, ஆசிரியை சித்ரா ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து இரண்டு மாணவிகளும் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனையடுத்து, இந்த தகவல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் (District Collector) கிறிஸ்து ராஜ் அவர்களுக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக, தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா மற்றும் தாசில்தார் கோவிந்தசாமி ஆகியோரை குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் குறித்த விசாரணையில், பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஒரு மாதங்களாகவே மாணவிகள் இருவரையும் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள், சம்மந்தப்பட்ட அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகளை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.