ஏப்ரல் 26, சென்னை (Technology News): சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரியல்மி தனது ரியல்மி நார்சோ 70 சீரீஸ் (Realme Narzo 70 series) போன்களை, தற்போது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரியல்மி நார்சோ 70 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 70X 5ஜி என இரண்டு மாடல்களில் வெளியிட்டுள்ளது. இவை இரண்டிலும் 45W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி திறன் ஆகிய அம்சங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 50mp கேமரா, ஆண்ட்ராய்டு 14, ரியல்மி UI 5.0 OS இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்கள் மற்றும் இரண்டு ராம் ஸ்டோரேஜ் (RAM Storage) என்று நமது விருப்பத்திற்கேற்ப உள்ளது. Beedi Leaves Smuggling: ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்; கடலோர காவல்படை அதிரடி நடவடிக்கை..!

ரியல்மி நார்சோ 70 5ஜி (Realme Narzo 70 5G): இதில் 6GB RAM , 128GB ஸ்டோரேஜ் வசதியுள்ள போன் ரூ.14,999-க்கு கிடைக்கின்றது. 8GB RAM, 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் ரூ.15,999-க்கும் உள்ளது. மேலும், 6.67-inch Full HD+ அமோல்டு டிஸ்ப்ளே (AMOLED display), 6nm மீடியாடெக் டைமென்சன் (MediaTek Dimension) 7050 5G SoC chipset உடன் ARM Mali G68 GPU வசதியுடன், 50MP பின்புற கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 70X 5ஜி (Realme Narzo 70X 5G): இதில் 4GB RAM, 128GB ஸ்டோரேஜ் வசதியுடன் ரூ.10,999-க்கும், 6GB RAM, 128GB ஸ்டோரேஜ் உள்ள போன் ரூ.11,999க்கும் கிடைக்கின்றது. மீடியாடெக் டைமென்சன் (MediaTek Dimension) 6100 + SoC with ARM Mali-G57 GPU உள்ளது. மேலும், 6.72-inch Full HD+, LCD டிஸ்ப்ளே, 50MP ப்ரைமெரி கேமரா, 2MP சென்சார் கேமரா மற்றும் 8MP செல்பி கேமரா ஆகிய அம்சங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது.