டிசம்பர் 27, மதுரை: கணவருக்கு ஜெர்மனியில் வேலைகிடைத்து சென்றுவிட, சீனாவில் இருந்த (Arrival From China Via SriLanka) பெண் மகளுடன் தமிழகம் வந்து கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் முடிவு வந்ததால் தனிமைப்படுத்தப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலந்தைகுளம் (Ilanthaikulam, Virudhunagar) பகுதியை சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சீனாவில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். தற்போது அவருக்கு ஜெர்மனியில் வேலை கிடைத்துவிட்ட காரணத்தால், அவர் சீனாவில் இருந்தவாறு ஜெர்மனி சென்றுள்ளார். Violence: மரித்துப்போன மனிதம்.. 20 வயது இளம்பெண்ணை 24 மணிநேரமும் வேலைசெய்ய வற்புறுத்தி சித்ரவதை.. பகீர் வீடியோ வைரல்.!
இதனையடுத்து, சீனாவில் இருந்த பெண்மணி தனது குழந்தையோடு தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளார். அதன்படி, இவர்கள் இருவரும் சீனாவில் இருந்து இலங்கை வழியே மதுரை விமான நிலையத்திற்கு வந்து தங்களின் இல்லத்திற்கு சென்றனர். தற்போது, உருமாறிய கொரோனா பரவல் தொற்று காரணமாக உள்ளூர் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
தாய் மற்றும் மகளுக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கும் வைரஸ் உறுதியாகவே, அவர்கள் சிகிச்சைக்காக விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் குடும்பத்தினர் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Note: மத்திய & மாநில அரசின் அறிவுறுதமிழ்நாடு,த்தலின்பேரில் கொரோனா நோயாளிகளின் தனிப்பட்ட அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது.