Vaiko (Photo Credit: Facebook)

பிப்ரவரி 04, நுங்கம்பாக்கம் (Chennai News): மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் (MDMK General Secretary Vaiko) முன்னாள் உதவியாளராக மதுரையைச் சேர்ந்த பிரசாத் பணிபுரிந்துள்ளார். இவர் இந்தியா முழுவதும், தடை விதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ) இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து, பிரசாத்திடம் சில தினங்களுக்கு முன்பாக சென்னை க்யூ பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை விவகாரம்.. மதுரையில் 144 தடை உத்தரவு அமல்.. பின்னணி என்ன?!

விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்ப்பு:

சென்னை கேகே நகரில் தற்போது பிரசாத் வசித்து வருகிறார். அங்குள்ள அவரது வீட்டில் கியூ பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு பிரசாத்திடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற நாட்டை உருவாக்கும் நோக்கத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு சுருக்கமாக எல்டிடிஇ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த அமைப்புக்கு தடை உள்ளது. இதற்கிடையே தான் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆள்சேர்க்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன.