செப்டம்பர் 15, கோவை (TamilNadu News): கோவை மக்கள் த்ரில்லான அனுபவத்தை பெரும் வகையில் உக்கடம் பெரியகுளத்தில், ஜிப் லைன் மற்றும் ஜிப் லைன் சைக்கிளிங் அறிமுகமாக இருக்கிறது. கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலைகளும், பூங்காக்களும் மேம்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல் மக்களை கவரும் விதமாக வித்தியாசமான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது. கிளாக் டவர், மீடியா டவர், செல்ஃ பி பாயிண்ட், தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை ஆகியவை கோவையின் புதிய அடையாளங்களாய் மாறி வருகின்றன. OTT Influence on Cinema: போட்டி போட்டுக் கொண்டு படங்களை வாங்கும் ஓடிடி நிறுவனங்கள்: படங்களின் வெளியீட்டில் தலையீடு.!
இந்த சைக்கிளிங், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் விதமாக பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் மூன்று பேர் சைக்கிளிங் செய்யும் விதமாக கட்டமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
தண்ணீருக்கு மேல் 200 மீட்டர் தூரம் ஜிப்லைன் மூலம் பயணம் செய்வதற்கு ரூ.250/- வரை கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த பிரம்மிக்க வைக்கும் பொழுதுபோக்கு அம்சம் இன்னும் சில நாட்களில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.