நவம்பர் 14, சான் பிரான்சிஸ்கோ (Technology News): சர்வதேச விமான தயாரிப்பு நிறுவனமாக போயிங் (Boeing) நிறுவனம் தங்களுடைய உலகளாவிய ஊழியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் பேரை பணிநீக்கம் (Layoffs) செய்வதாக அறிவித்துள்ளது. அத்துடன் தங்களுடைய 777x விமானத்தை டெலிவரி செய்வதை ஒரு ஆண்டுக்கு தள்ளி போட இருப்பதாகவும் போயிங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் தொடர்ந்து 3வது காலாண்டாக நஷ்டத்தை சந்தித்திருப்பதாக அறிவித்துள்ளது. AMD Layoffs: ஏஐ தொழில்நுட்பத்தால் 1,000 பேருக்கு பறிபோகும் வேலை.. ஏஎம்டி நிறுவனம் அதிரடி..!
இந்த நிறுவனம் 2024-ஆம் ஆண்டின் 3வது காலாண்டில் மட்டும் 5 மில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டமடைந்துள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் இதற்கு முக்கிய காரணம். இதனிடையே போயிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெல்லி ஆர்ட்பெர்க் (Boeing CEO Kelly Ortberg) ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமான அளவு குறைக்க போகிறோம் என ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
மேலும், அவர் 17,000 பேரை வேலையில் இருந்து நீக்கப் போவதாக கூறினார். இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து அமெரிக்க சந்தையில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் 1.1% வரை சரிவடைந்தன. இந்நிலையில், போயிங் நிறுவனம் ஊழியர்களுக்கு (Employees) பணிநீக்கம் குறித்த அறிவிப்புகளை வெளியிடத் தொடங்கியதால், சுமார் 17,000 ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேலை வெட்டுக்கள் 10% பணியாளர்களை பாதிக்கும் என்றும் ஊழியர்கள் ஜனவரி 2025 முதல் வெளியேறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.