Amazon Now (Photo Credit: @DynamiteNews_ X)

செப்டம்பர் 12, சென்னை (Technology News): அமேசான் நிறுவனம் இந்தியாவில் 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் வகையில் 'அமேசான் நவ்' என்ற சேவையை தொடங்கியது. முதலில் பெங்களூரு மற்றும் டெல்லியில் வாடிக்கையாளர்களின் வரவேற்பைத் தொடர்ந்து, அமேசான் தனது 10 நிமிட டெலிவரி சேவையை (Amazon Now 10 Minute Delivery) மும்பைக்கு விரிவுபடுத்தியுள்ளது. மளிகைப் பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை ஆயிரக்கணக்கான அன்றாட அத்தியாவசியப் பொருட்களை வாங்க அமேசான் நவ் வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் உதவுகிறது. Moto Pad 60 Neo: மோட்டோ 5ஜி டேப்லெட் அறிமுகம்.. மோட்டோ பேட் 60 நியோ விலை, சிறப்பம்சங்கள் இதோ..!

10 நிமிட டெலிவரி:

நிறுவனம் 3 நகரங்களிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட மைக்ரோ-ஃபுல்ஃபில்மென்ட் மையங்களைத் திறந்துள்ளது. மேலும், ஆர்டர் அளவுகள் மாதந்தோறும் 25% அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் நூற்றுக்கணக்கானவற்றைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. அமேசானின் அதிவேக டெலிவரி சேவை, விற்பனையாளர்களிடமிருந்து தினசரி அத்தியாவசியப் பொருட்களின் பரந்த தேவையையும், நிறுவனத்தின் உயர் தரநிலைகளான பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையையும் ஒருங்கிணைக்கிறது. அமேசான் நவ் பெங்களூரு, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பல பகுதிகளுக்கு தொடர்ந்து விரிவடையும். மேலும், வரும் மாதங்களில் மற்ற நகரங்களிலும் தொடங்கவுள்ளது.