Jack Dorsey | Block Logo File Pic (Photo Credit: @jack X | Wikimedia Commons)

மார்ச் 26, சான் பிரான்சிஸ்கோ (Technology News): ட்விட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சியின் ஃபின்டெக் நிறுவனமான பிளாக் (Block), மறுசீரமைப்பின் போது 1,000 ஊழியர்களை பணிநீக்கம் (Layoff) செய்யவுள்ளது. பிளாக் பணிநீக்கங்கள், ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. Three New Airlines in 2025: இந்தியாவுக்கு 3 புதிய விமான நிறுவனங்கள்.. வளர்ச்சியை நோக்கி விமானப் போக்குவரத்துத்துறை..!

பிளாக் பணிநீக்கம்:

அமெரிக்காவை தளமாக கொண்ட பிளாக் நிறுவனத்தின் பணிநீக்கங்கள், செலவு குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மக்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றுவதன் மூலமோ அல்லது பணியாளர்களின் எண்ணிக்கையை மாற்றுவதன் மூலமோ குறிப்பிட்ட நிதி இலக்கை அடையும் நிறுவனத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றும் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். பணிநீக்கங்கள் மூலம், நிறுவனம் மீண்டும் ஒரு தொடக்கத்தை உருவாக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு தெரிவித்ததாகவும் அறிக்கையில் கூறப்படுகிறது.

சரிவை சந்தித்த பிளாக் நிறுவனம்:

2025ஆம் ஆண்டில் பிளாக் நிறுவனத்தின் பங்கு 29% சரிவை கண்டுள்ளது. இது வருவாய் மற்றும் லாபத்தை பாதித்தது. பங்குகளின் மதிப்பை அதிகரிப்பதற்கான தனது வேலையின் ஒரு பகுதியாக மறுசீரமைப்பு இருப்பதாக ஜாக் டோர்சி (Jack Dorsey) கூறினார். தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, நிறுவனம் வெளிப்படைத்தன்மை மற்றும் ஆட்டோமேஷனை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.