மே 13 , அமெரிக்கா (Technology News): அமெரிக்கர்களிடையே பிரபலமாக இருந்த ட்விட்டர் நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகளவிலான சந்தாதாரர்களை பெற்று பிரபலமடைந்தது. சமீபத்தில் அதனை உலக செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதனை வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை அவர் வாங்கிய பின்னர் பல்வேறு நடைமுறை மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.
ட்விட்டர் நிறுவனத்தின் பணியாளர்கள் வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர். ட்விட்டர் சார்பில் முக்கிய புள்ளிகளுக்கு வழங்கப்பட்ட புளூ டிக் பணத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டது. பணம் செலுத்தும் சந்தாதாரர்களுக்கு கூடுதல் வசதியாக இடுகைகளில் எழுத்துக்களின் எண்ணிக்கை மற்றும் விடீயோவின் நீளம் போன்றவை கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. Madurai Rains: தொடர் மழை, பலத்த காற்று எதிரொலி.. கோழிப்பண்ணை இடிந்து விழுந்து 3 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் பலி.!
இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சி.இ.ஓ பொறுப்பில் லிண்டா யச்சரினோ (Linda Yaccarino) பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்த தகவலை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். அவர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மேற்படி பணியாற்றுவார் என தெரிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ளது.