அக்டோபர் 17, டெல்லி (Technology News): ஐரோப்பிய (Europe) விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் (Airbus), அதன் பாதுகாப்பு (Defence) மற்றும் விண்வெளி பிரிவில் (Space Division) சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் (Layoff) செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. செயற்கைக்கோள் திட்டங்களில் ஏற்பட்ட இழப்புகள் தான் இந்த முடிவு எடுக்கப்பட முக்கிய காரணமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன. Food Connoisseurs India Awards 2024: சிறந்த உணவு விநியோக செயலி.. வென்ற சென்னையைச் சேர்ந்த நிறுவனம்..!
மொத்த ஊழியர்களில் சுமார் 7% பேர், அதாவது 2,500 ஊழியர்களை 2026-ஆம் ஆண்டின் பாதியில் பணிநீக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏர்பஸின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி பிரிவு, செயற்கைக்கோள் (Satellite) திட்டங்கள், ஒன்சாட் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட அதிக செலவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு திட்டங்களில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் அதிகரித்த செலவுகள் பிரிவின் நிதி நிலையை கூடுதலாக பாதித்துள்ளன. ஏர்பஸ் தனது பாதுகாப்பு மற்றும் விண்வெளி வணிகத்திற்குள் ATOM என்ற குறியீட்டு பெயருடன் ஒரு விரிவான செயல்திறன் ஆய்வை மேற்கொண்டு வருகின்றது. இந்த ஆய்வு மூலம் செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும் முடியும்.
ஏர்பஸ் தனது விண்வெளி அமைப்புகள் வணிகத்திற்கான ஒரு குறிப்பிட்ட மாற்றத்தைக் கொண்டு வர திட்டமிட்டு வருகின்றது. இத்தாலியின் லியோனார்டோ மற்றும் பிரான்சின் தாலெஸ் ஆகியவற்றை தனது செயற்கைக்கோள் பிரிவுடன் ஒருங்கிணைப்பு நடத்த அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.