SpaceX (Photo Credit: @elonmusk X)

நவம்பர் 19, சான் பிரான்சிஸ்கோ (Technology News): இஸ்ரோ தயாரித்த 4,700 கிலோ எடை கொண்ட ஜிசாட் 20 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் (Elon Musk) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் (SpaceX) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் தகவல் தொடர்பு சேவை மேம்படுத்துவதற்காக ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. ஜிசாட் N2 செயற்கைக் கோள் வர்த்தக முறையில் விண்ணில் செலுத்தப்படுவதால் இந்த திட்டத்திற்கு 500 முதல் 600 கோடி ரூபாய் வரை செலவாகும். இதன் ஆயுட்காலம் 14 ஆண்டுகள் ஆகும். Gold Silver Price: விண்ணை முட்டும் தங்கம் விலை‌‌.. ரூ.56 ஆயிரத்தைத் தொட்டது.. இன்றைய விலை நிலவரம் இதோ.!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் ஜிசாட் N2 செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. செயற்கைக்கோளில் 32 பீம்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும். இந்த செயற்கைக்கோள் அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும், விமானங்களில் இணைய இணைப்பை கொண்டு வரவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.