மே 06, சென்னை (Technology News): நத்திங் நிறுவனம் தனது அடுத்த பதிப்பான நத்திங் போன் (3) (Nothing Phone (3) Launch) பற்றிய பரபரப்பு நிலவி வருகிறது. நத்திங் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், சிலபல கசிவுகள் வெளிவந்த நிலையில் உள்ளன. மேலும், இதுகுறித்த வெளியீட்டு தேதி விவரங்கள் இதுவரை நத்திங் நிறுவனத்திடம் இருந்து தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஜூலை 2022-ஆம் ஆண்டு நத்திங் போன் (1) மற்றும் ஜூலை 2023-ஆம் ஆண்டு நத்திங் போன் (2) வெளியீட்டு அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு, நத்திங் போன் (3) இந்தாண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று பலர் கணித்துள்ளனர். OnePlus Nord CE4 Lite India Launch: ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட்.. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?.!

சிறப்பம்சங்கள்: கடைசியாக வெளிவந்த போனில் Snapdragon 8 Gen 3 சிப்செட்டைக் கொண்டு நத்திங் போன் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இது சிறந்த செயல்திறனை அளிக்கிறது. இதில் 5,000 mAh பேட்டரி திறன்கொண்ட வசதியுடன் நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையில் இருக்கலாம். மேலும், இதில் நத்திங் OS 3.0 பயன்படுத்த வாய்ப்புள்ளது.

விலை குறித்த விவரம்: இதுவரையில் அதிகாரப்பூர்வமான எந்தவித விலை நிர்ணய பட்டியலும் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்தியாவில் ரூ.40,000 முதல் ரூ.45,000 வரையிலான விலையில் வரக்கூடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. நத்திங் போன் (3), ஒன்பிளஸ் 12R மற்றும் iQOO நியூயோ 9 ப்ரோ போன்ற போன்களுடன் வலுவான சிறப்பம்சங்களுடன், தனித்துவமான வடிவமைப்பில் மிகச் சிறந்த போட்டியாக இருக்கும்.