பிப்ரவரி 02, புதுடெல்லி (New Delhi): இன்று வெளியே செல்லும் பொழுது யாரும் கையில் பணத்தை எடுத்துச் செல்வதில்லை. அனைவரும் டிஜிட்டல் கட்டண முறையை தான் பயன்படுத்தி வருகின்றனர். டிஜிட்டல் பண பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து மால் வரை அனைத்து இடங்களிலும் உள்ளது. இதனால் அனைவரும் சுலபமாக கட்டணங்களை செலுத்தி வருகின்றோம். தற்போது இந்த டிஜிட்டல் பணவர்த்தனையானது மற்ற நாடுகளிலும் நாம் செய்யுமாறு பல்வேறு அம்சங்கள் அறிமுகமாகி வருகின்றனர்.
பிரான்சில் யுபிஐ: இந்நிலையில் இந்திய சுற்றுலா பயணிகள் இனி பிரான்சில் யுபிஐ மூலம் ரூபாயில் பணம் செலுத்தக்கூடிய வசதியினை ஏற்படுத்தி உள்ளதாக மத்திய அரசு தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி பிரான்சிங் லைரா நெட்வொர்க்குடன் இந்தியா யுபிஐ மற்றும் ரூபே ஏற்றுக் கொள்வதற்காக ஒரு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. இதன் கீழ், இந்திய சுற்றுலா பயணிகள் பிரான்சில் யுபிஐ மூலம் ரூபாய் செலுத்த முடியும். அது மட்டும் இன்றி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக ஈபிள் டவரில் மட்டும் இச்சேவையை தொடங்கியுள்ளனர். சிறிது நாட்களுக்குப் பிறகு பிரான்ஸ் முழுவதும் இது விரிவடையும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் பாரிசில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், யுபிஐ பணம் செலுத்தத் தொடங்கிய மற்றொரு நாடாக பிரான்ஸ் மாறுகிறது. இதற்கு முன் சிங்கப்பூர், பூடான், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய நாடுகளுடனும் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.