Infinix Hot 50 5G (Photo Credit: @andro_arabic X)

செப்டம்பர் 09, சென்னை (Technology News): இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G Smartphone) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

விலை:

சிறப்பம்சங்கள்:

  • இதில், 6.7-இன்ச் IPS LCD திரையுடன் 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன், இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி MediaTek Dimensity 6300 செயலியால் இயக்கப்படுகின்றது.
  • இது 8GB வரையிலான RAM மற்றும் 128GB சேமிப்புடன் வருகின்றது. மேலும், micro SD கார்டைப் பயன்படுத்தி 1TB வரை விரிவாக்கம் செய்யலாம்.
  • இந்த ஸ்மார்ட்போன் Android 14-யை அடிப்படையாகக் கொண்டு Infinix-யின் XOS 14.5 ஸ்கின் இயங்குகிறது.

    இதில், 5,000mAh பேட்டரி திறன்கொண்ட 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வந்துள்ளது.

  • ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 50MP முதன்மை சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கு, 8MP முன்புற கேமரா உள்ளது.