Lava Blaze Dragon (Photo Credit: @vinishkeshri12 X)

ஜூலை 21, சென்னை (Technology News): லாவா நிறுவனம் வரும் ஜூலை 25ஆம் தேதி அன்று, ஒரு புதிய லாவா பிளேஸ் டிராகன் (Lava Blaze Dragon Smartphone) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. முன்னதாக, இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை லாவா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டால் இயக்கப்படும் உறுதிப்படுத்தியுள்ளது. New UPI Rules: யுபிஐ புதிய விதிகள் என்னென்ன..? தவறாக டெபிட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா? விவரம் உள்ளே..!

விலை (Lava Blaze Dragon Price):

இந்தியாவில் ரூ. 10,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும். வருகிற ஜூலை 25ஆம் தேதி அன்று மதியம் 12 மணிக்கு அறிமுகப்படுத்தப்படும்.

லாவா பிளேஸ் டிராகன் சிறப்பம்சங்கள் (Lava Blaze Dragon Specifications):

  • இதில், ஏஐ ஆதரவு கொண்ட 50 எம்பி பிரைமரி சென்சார் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா செட்டப், எல்இடி பிளாஷ் யூனிட் உடனான ஒரு டேப்லெட் வடிவத்தில் உள்ளது. 8 எம்பி செல்பி கேமரா இருக்கலாம்.
  • லாவா பிளேஸ் டிராகன் ஸ்மார்ட்போனில், 5,000mAh பேட்டரி கொண்ட 18W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரவுள்ளது.

    ஸ்டோரேஜை பொறுத்தவரை, 128GB UFS 3.1 ஆன்போர்டு ஸ்டோரேஜை ஆதரிக்கலாம்.

  • இது 4GB ரேம் + 128GB வேரியண்ட் மற்றும் 6GB ரேம் + 128GB வேரியண்ட் என 2 வகைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.