Elon Musk (Photo Credit: Wikipedia)

ஜூன் 12, கலிபோர்னியா (Technology News): கடந்த சில வருடங்களுக்கு முன்பு எலன் மஸ்க் ட்விட்டர் (Twitter) நிறுவனத்தினை வாங்கினார். தொடர்ந்து அந்த இணையதளத்தின் பெயரை எக்ஸ் (X) என்று மாற்றினார். அவர் அந்த சமூக வலைதளத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருந்தே இருந்தார். மற்றொரு பக்கம் நியூராலிங்க் (Neuralink) அமைப்பின் சார்பில் மனிதர்களின் மூளையில் ஸ்டார்ட்டர் சிப் பொருத்தி, அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பரிசோதனை செய்து வந்தார். அதுமட்டுமின்றி இந்த பரிசோதனையின் முதற்கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும், முதல் மனிதர் நியூராலிக்கை பொருத்தி, அவர் நலமுடன் இருப்பதாகவும் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருந்தார். Chandrababu Naidu Oath Ceremony 2024: ஆந்திர முதலமைச்சராக 4 ஆவது முறையாக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு..!

இவரது ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனம் விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் மனிதர்களும் விண்ணுக்குச் சென்று வெற்றிகரமாக தரை இறங்கி வருகிறார்கள். இந்நிலையில் எலான் மஸ்க் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பல பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையம் முழுதும் வைரலாகி வருகிறது. அதாவது, “இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 4வது கிரகமான செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை அனுப்பி உள்ளோம். மேலும் செவ்வாய் கிரகத்தில் மில்லியனுக்கும் அதிகமான மனிதர்களை அனுப்புவது தான் அடுத்த திட்டம். இந்த திட்டம் வெற்றி அடைந்த பின்னர், அடுத்து 7வது கிரகமான யுரேனஸூக்கு மனிதர்களை அனுப்புவதே எனது கனவு” என அவர் பதிவிட்டுள்ளார்.